கழுத்தை அறுத்து வாலிபன் தற்கொலை – நடந்தது இது தான்

கழுத்தை அறுத்து வாலிபன் தற்கொலை – நடந்தது இது தான் …………………..

மதுரை பெருங்குடியை அடுத்துள்ள வலையங்குளம் அருகே மரக்கான் பாறையை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 32) இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கொத்தனார் வேலை பார்த்து வந்த இவரது வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு 4 பேர் வந்தனர். அவர்களும் தங்கபாண்டி வீட்டில் தங்கி இருந்தனர். இதனால் தங்கபாண்டி மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டார்.

இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள ஒரு முள்புதருக்குள் தங்க பாண்டி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் பெருங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தங்கபாண்டி வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் 2 பேரை போலீசார் பிடித்தும் விசாரித்து வருகிறார்கள். 

Related Post

Wordpress content guard plugin by JaspreetChahal.org