( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . ) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருடன் மாணவி ஓட்டம் மேலும் படிக்க இதில் அழுத்துங்கள்

சூடான வாழைக்காய் பஜ்ஜி………………….

ethiri.com

தேவையான பொருட்கள் :

வாழைக்காய் – 1
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் – 1/2 கப்

செய்முறை :

* வாழைக்காயை தோலுரித்து, நீளமாக வெட்டிக்கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, ஓமம், மிளகாய் தூள், உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெயானது சூடானதும், அதில் நீளமாக வெட்டி வைத்துள்ள வாழைக்காயை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* சூடான வாழைக்காய் பஜ்ஜி ரெடி.
 

பெண்களுடன் காதல் முறிந்தால் இப்படி பண்ணுங்க எல்லாம் சரியாகிடும் -மேலும் படிக்க இதில் அழுத்துங்க

Related Post