செல்பி’ எடுத்த கல்லூரி மாணவியை பொதுமேடையில் தூக்கிய ஹிருத்திக்ரோ‌ஷன்………………

பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக்ரோ‌ஷன். சமீபத்தில் இவர் பார்வையற்றவராக நடித்த புதிய இந்தி படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் ‘பலம்’ என்ற பெயரில் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

ஹிருத்திக்ரோ‌ஷனுக்கு இந்தி திரையுலகில் மட்டும் அல்லாமல் தமிழகம், கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். கேரளாவில் இவருக்கு ரசிகைகள் ஆதரவு அதிகம்.

நடிகர் ஹிருத்திக்ரோ‌ஷன் பல்வேறு தனியார் நிறுவனங்களின் விளம்பர தூதுவராகவும் உள்ளார். இதன்படி ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று கேரள மாநிலம் கொச்சிக்கு ஹிருத்திக்ரோ‌ஷன் வந்தார்.

அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்களும் அந்த நிகழ்ச்சியில் திரண்டனர். நிகழ்ச்சியின் போது மேடை ஏறிய ரசிகர்கள் அவருடன் தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது ஒரு கல்லூரி மாணவி செல்பி எடுத்த போது அவரை ஹிருத்திக்ரோ‌ஷன் அலேக்காக தூக்கினார். இதனால் அந்த மாணவி இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தார். ரசிகர்களும் இதை பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு தொடர்ந்து ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த நடிகர் ஹிருத்திக் ரோ‌ஷன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post