சைனீஸ் ப்ரைடு ரைஸ்

தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 2
எண்ணெய் – 2 1 /2 மேசைக்கரண்டி
முட்டை – 1 – 2 (முட்டையை லேசாக அடித்துக் கொள்ளவும்)
நல்லெண்ணெய் -1 /4 தேக்கரண்டி
சிக்கன் எலும்பில்லாதது – 1 கப்
கேரட் – 1 /2 கப்
பட்டாணி – 1 /2 கப்
வெங்காயத்தாள் (green onion ) – 4
சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
அரிசி – 4 கப்

செய்முறை :

* வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியை உதிரியாக வேகவைத்து ஆறவைத்து கொள்ளவும்.

* வெங்காயத்தாள், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து கொள்ளவும். சாதம் நன்றாக ஆறினால்தான் ப்ரைடு ரைஸ் செய்வதற்கு நன்றாக இருக்கும்.

* கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* முட்டையுடன் நல்லெண்ணெய் கலந்து வைத்துக் கொள்ளவும்.

* அதே கடாயில் 1 /2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடாயைச் சுற்றிலும் எண்ணெய் படருமாறு செய்யவும் , கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி கடாயைச் சுற்றிலும் படருமாறு செய்யவும். முட்டை மேலே எழும்பி வரும்போது அதை திருப்பிப் போட்டு வேக விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும்.

* இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத்தாள், அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

* இதனுடன் 2 மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் நறுக்கி வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 1 நிமிடம் வதக்கிப் பரிமாறவும்.

* சூப்பரான சைனீஸ் ப்ரைடு ரைஸ் ரெடி. 

.. உலக பங்கு சந்தையில் பணத்தை அள்ள இதோ வழி..அவர்கள் 1௦௦௦ டொலர்களை இலவசமாக தருகின்றனர் , அதில் நீங்கள் பழகி பார்த்து பின்னர் வியாபாரத்தை ஆரம்பிக்க முடியும் ..அதில் நஷ்டம் ஏற்பட்டால் அதை விட்டு நீங்கள் ஓட்டம் பிடிக்கலாம் . மேற்படி நாணயமாற்று விபரம் சந்தையின் ஏற்ற இறக்கம் தொடர்பான தின ,கணிப்பை நாம் உங்களுக்கு இலவசமாக தருவோம் முயன்று பார்த்து வெற்றி பெறுங்கள் . உங்கள் வீட்டில் இருந்தபடிய அமெரிக்கா டாலரில் பணத்தை அள்ள முடியும் ..ஒவ்வொரு நாடுகளுமே இந்த சந்தையால் தான் உயிர்வாழ்கின்றன . நீங்கள் இணையும் போது ஒரு சதமும் போட வேண்டிய தேவை இல்லை ... மேலதிக தகவலுக்கு எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் ...00447536707793 WHATSUP ,VIBER, SKYPE - ETHIRI.COM2

Related Post