ethiri.com

புலிகள் என்னை கொல்ல போறாங்க – புலி பீதியை கிளப்பி புலிகளது தடையை நீடிக்க சுமந்திரன் சதி …………..

இலங்கையில் புலிகள் அழிக்க பட்டு அதன் எழுச்சி மிகு வீர விடுதலை சாகடிக்க
பட்ட இவ்வேளையில் தனக்கு புலிகளினால் ஆபத்து எனவும் அவர்கள் என்னை குண்டு வைத்து கொல்ல
போகின்றனர் என நாரதர் சுமந்திரன் தனது ஊதுகுழல் ஊடகங்கள் ஊடாக செய்திகளை வெளியிட்டுள்ளார்

புலிகள் உள்ள காலத்தில் இவர் எங்கிருந்தார் ,என்ன செய்தார் என தெரியாது பதுங்கி கிடந்த
சுமந்திரன் தற்போது வெள்ளை வெட்டி கூட்டமைப்பின் மடிக்குள்
செல்ல பிள்ளையானார் .

ethiri.com

நீதிபதிகளையே இவர் மிரட்டும் அளவுக்கு சிங்கள அதிகார ஆட்சி பீடங்களின் தயவால் பெரும்
நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றார் .

கூட்டமைப்புக்கு முன்னாள் போராளிகள் சில வெளிப்படையான கோரிக்கையை
வைத்ததன் பின்னர் தற்போது புலி பீதியை கிளப்பி ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு முன்னோடியாக இந்த புலி பீதியை சிங்களத்துடன் இணைந்து சுமந்திரன் கிளப்பி
வருகின்றார் .

இவர் மீளவும் புலம் பெயர் நாடுகளுக்கு வருகை தந்தால்
இந்த அரச மகுடி ஊதலுக்கு அர்ச்சனை செய்விக்க பட்டு கவுரவிக்க படுவார் என எதிர்பார்க்க படுகிறது  

Related Post