ethiri.com

சுவிசில் இருந்து இலங்கைக்கு அனுப்பட்ட பட்ட போராளி குடும்பத்திற்கு 30 ஆயிரம் டொலர்களை தண்டமாக செலுத்த நீதிமன்றம் உத்தரவு ……………….

புகலிடம் கோரிவந்த ஈழத் தமிழரான முன்னாள் போராளி மற்றும் அவரின் குடும்பத்தினரை திருப்பியனுப்பியமைக்காக ஐரோ ப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுவிட்சர்லாந்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் குறித்த ஈழத் தமிழருக்கு 30 ஆயி ரம் யூரோக்களை அதாவது 48 இலட்சம் இலங்கை ரூபாவை நட்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அவர்கள் திருப்பியனுப்பப்பட்டதை மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய பிரகடனத்தை மீறியதாக கருதிய நீதிம ன்றம், வழிகாடல் கட்டணமாக மேலும், 4 ஆயிரத்து 770 யூரோக்களை அதாவது 7 இலட்சத்து 60 ஆயிரம் இலங்கை ரூபாவையும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ethiri.com

ஈழத் தமிழர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கடந்த 2009 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் குடியேறினார்.

இதையடுத்து, புகலிடம் கோரி அரசாங்கத்திடம் அவர் விண்ணப்பம் செய்துள்ளார்.

ஆனால், அவரது விண்ணப்பத்தை நிராகரித்த சுவிட்சர்லாந்து அரசாங்கம், அவரையும் அவரது குடும்பத்தினரையும் கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கைக்கு திருப்பியனுப்பியது.

திருப்பி அனுப்பப்பட்ட குறித்த முன்னாள் போராளியும், அவரது குடும்பமும் கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு கடும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 13 மணித்தியால விசாரணையின் பின்னர் மனைவியும், பிள்ளைகளும் விடுவிக்கப்பட்ட போதிலும், முன்னாள் போராளி பூசா தடுப்பு முகாமில் பலமாதங்கள் தடுத்துவைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

அதன்பின்னர் புனர்வாழ்வு என்ற பெயரில் அடையாளங்காணப்படாத இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்.

2013 ஆண்டும் ஏப்ரல் 6 ஆம் திகதி குறித்த போராளி தடுத்துவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு விஜயம் செய்துள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரியிடமும், ஐ.நா மனித உரிமை அதிகாரியொருவரிடமும் அவர் அங்குள்ள நிலைமைகளைக் கூறமுடியாத ஒரு இக்க ட்டான சூழலில் இருந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த விஜயத்தின் பின்னர் அவரது மனைவியும், பிள்ளைகளும் மீண்டும் சுவிட்சர்லாந்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறா ர்கள்.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்டுள்ள இவர் மீண்டும் மனிதாபிமான அடிப்படையில் சுவிற்சர்லாந்திற்குச் செல்வத ற்கு விண்ணப்பித்து மீண்டும் அங்கு சென்ற அவர் மீண்டும் புகலிடக்கோரிக்கைக்கு விண்ணப்பித்தபோது அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதேநிலைமை பெயர் குறிப்பிடப்படாத மற்றுமொரு நபருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்குக் குறித்து நேற்றையதினம் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ள மிக முக்கியமான தீர்ப்பொன்றில், குறித்த நபர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் சித்திரவதைக்குள்ளாவார் என்று கூறியிருந்தமைக்கு மத்தியிலும், திருப்பி அனுப்பப்பட்டு அங்கு சித்திரவதை க்குள்ளாகியிருக்கிறார் என்றும் இந்த அபாயங்கள் சுவிற்சர்லாந்து அறிந்துவைத்திருக்கவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தி ருக்கிறது.

இந்த வகையில் சித்திரவதை இடம்பெறும் நாடொன்றிற்கு அபாயங்களுக்கு மத்தியில் புகலிடக்கோரிக்கையாளரொருவரைத் திருப்பி அனுப்பியிருப்பதனூடாக சுவிற்சர்லாந்து மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கையினை மீறியிருக்கிறது என்று தீர்ப்பளித்திருக்கிறது. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post