பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய விளையாட்டு விழா- photo……………..

பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய விளையாட்டு விழாவில் அமைச்சர் டெனிஸ்வரன் மாணவர்களுக்கு வாழ்வின் விழுமியங்கள் குறித்து பேசுகையில் மேற்கொண்டவாறு தெரிவித்தார்…

மடு கல்விவலயத்திற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் 24-01-2017 மாலை 1:30 மணியளவில் கல்லூரி பிரதான மைதானத்தில் பாடசாலையின் முதல்வர் எஸ்.ராஜரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த விளையாட்டு விழாவிற்கு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார், சிறப்பு விருந்தினராக பங்குத்தந்தை அவர்களும், விசேட விருந்தினராக மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி அவர்களும் அத்தோடு மடு கல்விவலயத்தின் உதவி கல்விப்பணிப்பாளர், மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில் அமைசர் உரையாற்றுகையில் பாடசாலையின் அபிவிருத்தி மாணவர்களது உயர்ச்சியிலும் அவர்களது அபிவிருத்தியிலுமே தங்கியுள்ளது என்றும் அவ்வாறு ஒரு பாடசாலை அபிவிருத்தியை நோக்கி பயணிக்கவேண்டுமெனில் அந்த பயணத்தில் நான்கு பகுதியினர் முக்கியமாக ஒற்றுமையோடு செயற்படவேண்டும் என்றும் அதாவது பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியவை உணர்வோடும் ஒற்றுமையோடும் செயல்பட ஆரம்பித்தால் குறித்த பாடசாலை விரைவாக அபிவிருத்தியை நோக்கி நகரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றும், அதே வேளை மாணவர்கள் விளையாட்டில் மாத்திரம் சிறந்து விளங்காது கல்வியிலும் அதிக கவனம் எடுத்து எல்லா துறைகளையும் சமமானதாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறியதோடு மாணவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாக ஒரு சிறந்த மாணவர் சமூகமாக வளரவேண்டுமெனில் உங்களுக்கு உயிர் தந்த பெற்றோர்களையும், கல்வியென்னும் அறிவை புகட்டும் ஆசான்களையும் உங்களது இரண்டு கண்களாக பார்க்கவேண்டும், நாம் கற்று எந்த உயரத்திற்கு சென்றாலும் இவர்கள் இருவரும் எமது கண்கள் என்ற எண்ணம் உள்ளத்தில் எப்போதும் இருக்க வேண்டும் அப்போதுதான் ஒரு சிறந்த நாடு உருவாகும் என்றும் தெரிவித்ததோடு, மாணவர்களுக்கு கேடயங்களும் வழங்கி கெளரவித்தார்.

நிருபர் சோழன்

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

உலக பங்கு சந்தையில் பணத்தை அள்ள இதோ வழி..அவர்கள் 1௦௦௦ டொலர்களை இலவசமாக தருகின்றனர் , அதில் நீங்கள் பழகி பார்த்து பின்னர் வியாபாரத்தை ஆரம்பிக்க முடியும் ..அதில் நஷ்டம் ஏற்பட்டால் அதை விட்டு நீங்கள் ஓட்டம் பிடிக்கலாம் . மேற்படி நாணயமாற்று விபரம் சந்தையின் ஏற்ற இறக்கம் தொடர்பான தின ,கணிப்பை நாம் உங்களுக்கு இலவசமாக தருவோம் முயன்று பார்த்து வெற்றி பெறுங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடிய அமெரிக்கா டாலரில் பணத்தை அள்ள முடியும் ..ஒவ்வொரு நாடுகளுமே இந்த சந்தையால் தான் உயிர்வாழ்கின்றன . நீங்கள் இணையும் போது ஒரு சதமும் போட வேண்டிய தேவை இல்லை ... மேலதிக தகவலுக்கு எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் ...00447536707793 WHATSUP ,VIBER, SKYPE - ETHIRI.COM2

Related Post