ethiri.com

யாழ் பல்கலைகழக மாணவர்கள் கொலையை கண்டித்து இலங்கை பிரிட்டன் தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் – படங்கள் உள்ளே

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வியாழக்கிழமை இரவு பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டமையை
கண்டித்து பிரிட்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக இன்று 25/10.2016 11 மணி முதல் , 3.00 மணிவரை
மாபெரும் மக்கள் கண்டன ,எதிர்ப்பு போராட்டம் ஒன்று தமிழர்களினால்நடாத்த பட்டுள்ளது .
யாழ்ப்பணத்தில் சிங்கள பொலிசாரினால் ஒரு மாணவன் அடித்தும் கொலை செய்யப்பட்டார் ,அத்துடன் மேலும் ஒருவர் சுட்டு படுகொலை புரிய பட்டுள்ளனர் .
மேற்படி இருவரது மரணத்தையும் விபத்து என மூடி மறைக்க பொலிசார் முயன்றனர் ஆயினும் மருத்துவ சான்றிதல்கள் படுகொலை
என்பதை காட்டி கொடுத்த நிலையில் சிங்கள ஆளும் அரசு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது .

தமிழர் ,வட கிழக்கு பகுதி எங்கும் மக்கள் கொந்தளித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகினறனர் .ஆளும் ரணில் ,
மைத்திரி கூட்டாட்சியில் மக்களுக்கு நடமாடும் பாதுகாப்பு உள்ளதாக காண்பிக்க பட்டு வந்த நிலையில்
மேற்படி படுகொலைகள் இடம்பெற்றுள்ளது இலங்கை
மண்ணில் தமிழர்கள் வாழ முடியாது என்பதை எடுத்து காட்டியுள்ளது .

ethiri.com

மாணவர்கள் ,மக்கள் கடத்த பட்டு ,காணமல் போயுள்ளதும் ,படுகொலை புரிய பட்டு வீதிகளில் சடலங்களாக
மிதப்பதும் அதிகரித்து வருகின்றது ,அத்துடன் தற்போது வெள்ளை வான் கடத்தல்களும் ,சிங்கள அரசினால் இயக்க படும்
தமிழ் ரவுடி ஆவா குழுவினாலும் பலர் கடத்த பட்டு வெட்டியும் கொல்ல பட்டும் வருகின்றது
தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

மேற்படி விடயங்கள் தொடர்ந்து இடம்பெற்று கொண்டிருக்கும் நிலையில் சிங்கள அரசு வழமை போல
யாவற்றையும் முடிமறைத்து சர்வதேச சமுகத்துக்கு தாம் நல்லவர்கள் போல காட்டி வருகிறது .

பிரிட்டன் இலங்கை தூதரகம் முன்பாக போராட்டங்கள் நடத்தியவர்களை சிங்கள் புலானய்வு துறையினர் இரகசியமாக காணொளி ,
மற்றும் புகைபடங்களை பிடித்து சென்றுள்ளனர் .
இதனால் மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

11

22

33 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post