ethiri.com

மோர் குழம்பு செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

புளித்த தயிர் – 1 கப்
வெண்டைக்காய் – 10
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 டீஸ்பூன்

ethiri.com

வறுத்து அரைப்பதற்கு…

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 1
தேங்காய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

செய்முறை :

* வெண்டைக்காயை தேவையான அளவில் வெட்டிக்கொள்ளவும்.

* தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சிறிது சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்டைக்காயை போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, வெண்டைக்காய் நன்கு வேகும் வரை வதக்கி, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் தயிர் ஊற்றி கிளறி, அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.

* பின்பு அதில் மஞ்சள் தூள், வெண்டைக்காய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

* சூப்பரான வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி!!! 

Related Post