ethiri.com

ஊற்றுப்புலம் அ.த.க பாடசாலைக்கு மேலைத்தேய வாத்திய இசைக்கருவிகள் சிறீதரனால் கையளிப்பு. படங்கள் உள்ளே ………………..

பாராளுமன்ற உறுப்பனர் சிவஞானம் சிறீதரன் அவரிகளின் 2016ம் ஆண்டின் பண்மகப்படுத்தப்பட்ட நிதியுடாக கொள்வனவு செய்யப்பட்ட மேலைத்தேய வாத்திய இசைக்கருவிகள் கையளிக்கும் நிகழ்வும் கன்னி இசை அணிவகுப்பு நிகழ்வும் கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நேற்று பாடசாலை அதிபர் திரு மகேசன் உமாசங்கர் தலைமையில் காலை 9.30 மணிக்கு நடை பெற்றது.
பாடசாலையின் முன்னாள் அமைந்திருக்கும் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம் பெற்று குறித்த இசைக்கருவிகள் இசை அணி மாணவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் . பாடசாலை முன்றிலில் இருந்து இசை அணி வகுப்பு மாணவர்கள் கன்னி இசை அணிவகுப்புடன் விருந்தினர்கள் பாடசாலை வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந் நிகழ்வில் கட்சியின் ஊற்றுப்புல அமைப்பாளர் சுரேன் மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் ஊற்றுப்புல கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து சிறப்பித்தனர்

நிருபர் சோழன்

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post