ethiri.com

கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி……………….

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் அளவுக்கு அதிகமான பேர் பயணம் செய்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான படகில் சுமார் 35 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ethiri.com

பீகார் மாநிலத்தில் மகர சங்கிராந்தி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த விபத்து மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அரசின் சுற்றுலா துறை சார்பில் மகர் சங்கிராந்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருவிழாவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளா 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post