ethiri.com

பெருந் தோட்டங்களில் தொடர்து 30 நாட்களாக கலைகட்டி வந்த இராமர் பஜனை முடிவு photo………………

மலையக பெருந்தோட்ட மக்கள்; 200 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் போது தனக்கு என ஒரு கலை கலாச்சராங்ளை கொண்டு வந்துள்ளனர். தற்போதும் அதை இந்தியாவில் போல் இங்கும் கடைபிடித்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக தற்போது மார்கழி மாதம் ஆரம்பமான நாள் முதல் தை மாதம் பொங்கள் இன்று (14) வரை வரும் காலப்பகுதியில் “ராமர் பஜனை” யை அனுஷ்;டித்து கொண்;டாடி வருகின்றனர்.

இராமயணத்தின் கதாபாத்தரங்களை மையமாக கொண்டு இந்த இராமர் பஜனை நடாத்தபட்டு வருகின்றது. நிகழ்வுகளில் ராமர்¸ ஆஞ்சநேயர்¸ சீதையின் முக்கியத்தவம் இங்கு பேனப்படுகின்றது. மார்கழி மாதம் விரதம் இருந்து ராமரை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெருவர். திருமண தடை நீங்தும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்¸ வியாபாரத்தில் நஷ்டம் நீங்கி இலாபம் பெருகும்¸ தொழில் பிரச்சனை நீங்தும். மாணவர்கள் நன்கு கல்வி பயில்வர்¸ கேட்கும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் இதுவே இந்த வழிபாட்டின் முக்கிய நோக்கமாகும்.

ethiri.com

இந்த 30 நாட்களும் குறிப்பாக ஆண்கள் இந்த விரத்தை அனுஷ்டித்து ராமர் கோயில் சென்று “கம்பம்” என அழைக்கபடும் சுவாமியை காலை விடியும் வேலையில் வீடு வீடாக தூக்கி செல்வர். அங்கு பெண்கள் வாசலுக்கு சானம் தெளித்து¸ கோலம் போட்டு¸ கம்பத்திற்கு நீர் ஊற்றி¸ அதில் இருக்கும் விளக்கிற்கு எண்ணெய் விட்டு¸ மாலை அணிவித்து¸ சூடம்¸ பத்தி¸ சாம்பிராணி இட்டு வழிபடுவர். ஆச் சந்தர்பத்தில் பக்தர்களினால் இராமபிரான் சார்ந்த பாடல்கள் இசைக்கபடும். இந்த நிகழ்வுகள் தற்போது மலையத்தில் உள்ள அனைத்து தோட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது. இந் நிகழ்வு இன்றுடன் (14.01.2017) பொங்கள் தினத்தன்று விழாவுடன். முடிவுருகின்றது. இந்த நிகழ்வுகளை இன்று புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்டத்தில் காணக் கூடியதாக இருந்தது.

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post