24மணிநேரமும் ஒரோ நேரத்தை காட்டும் அதிசய மணிக்கூட்டு கோபுரம்-ஓட்டமாவடியில்…………..

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குற்பட்ட கொழும்பு பிரதான வீதியின் ஓட்டமாவடி பாலத்துக்கு முன்பாக அமைத்துள்ள மணிக்கூட்டு கோபுரம் அதன் சுற்று வட்ட பகுதி கவனிப்பார் அற்ற நிலையில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் 2மில்லியன் ரூபாய் செலவில் ஓட்டமாவடி பிரதேச அழகு படுத்தல் வேலைத்திட்டமாக மேற்கொள்ளப்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு முன்பாக அமைத்துள்ள மணிக்கூட்டு கோபுரம் பல மாதகாலமாக செயல் இழந்து காணப்படுவதுடன் இருபத்திநாலு மணிநேரமும் ஒரோ நேரத்தை காட்டும் அதிசய மணிக்கூட்டு கோபுரமாக காட்சியளிக்கின்றது.

மணிக்கூட்டு கோபுரமும் அது அமைத்துள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்ரூற்று தடாகம் டெங்கு நுளம்பு பரவும் விதத்திலும் ஏனைய பகுதிகளில் மிருகங்களின் மண்டை ஓடு ,எழும்புகள் உள்ளிட்ட எச்சங்கள் காணப்படுவதுடன் இவ்விடம் ஓட்டமாவடி பிரதேச சபையின் உரிய பராமறிப்பு இல்லாமையினால் பற்றைகாடுகள் வளர்த்து வருவதுடன் கால் நடைகளின் மேச்சல் தரையாக மாறியுள்ளது இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பயனையும் அளிக்காத இடமாகவும் மாறி வருவதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

உலக பங்கு சந்தையில் பணத்தை அள்ள இதோ வழி..அவர்கள் 1௦௦௦ டொலர்களை இலவசமாக தருகின்றனர் , அதில் நீங்கள் பழகி பார்த்து பின்னர் வியாபாரத்தை ஆரம்பிக்க முடியும் ..அதில் நஷ்டம் ஏற்பட்டால் அதை விட்டு நீங்கள் ஓட்டம் பிடிக்கலாம் . மேற்படி நாணயமாற்று விபரம் சந்தையின் ஏற்ற இறக்கம் தொடர்பான தின ,கணிப்பை நாம் உங்களுக்கு இலவசமாக தருவோம் முயன்று பார்த்து வெற்றி பெறுங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடிய அமெரிக்கா டாலரில் பணத்தை அள்ள முடியும் ..ஒவ்வொரு நாடுகளுமே இந்த சந்தையால் தான் உயிர்வாழ்கின்றன . நீங்கள் இணையும் போது ஒரு சதமும் போட வேண்டிய தேவை இல்லை ... மேலதிக தகவலுக்கு எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் ...00447536707793 WHATSUP ,VIBER, SKYPE - ETHIRI.COM2

Related Post