( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . ) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருடன் மாணவி ஓட்டம் மேலும் படிக்க இதில் அழுத்துங்கள்

ரவிராஜ் மனைவி நீதிமன்றில் வழக்கு – விடுவிக்க பட்ட கைதிகள் சிறையில் அடைக்க கோரிக்கை……………….

ethiri.com

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் பிரதிவாதிகள், வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு வழங்கப்பட்ட ஜூரிகளின் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு, ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். இதேவேளை, இந்த வழக்கை ஜூரிகளின்றி விசாரணைக்கு உட்படுத்துமாறும், அந்த மேன்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது. “பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழேயே சுமத்தப்பட்டுள்ளன. அவ்வாறானதொரு வழக்கை ஜூரிகளின் முன்பாக விசாரணைக்கு எடுத்துகொள்வது குறைபாடுகளைக் கொண்டதாகும். “இதேவேளை, தமது தரப்பு சட்டத்தரணிகள், ஜூரிகள் சபை தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர். “எனினும், தினந்தோறும் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையின் பின்னர், டிசெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு, ஜூரி சபையினால் பிரதிவாதிகள் அனைவரும் குற்றவாளிகள் அல்லர் என தீர்ப்பளித்ததன் பின்னர், மேல் நீதிமன்ற நீதிபதி அவ்வனைவரையும் விடுதலை செய்துள்ளார்” என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next
பெண்களுடன் காதல் முறிந்தால் இப்படி பண்ணுங்க எல்லாம் சரியாகிடும் -மேலும் படிக்க இதில் அழுத்துங்க

Related Post