ethiri.com

வறுமையின் காரணமாக தோட்டம் செய்து கொண்டு படித்த மாணவன் வடக்கில் முதலிடம்..!

தற்போது வெளியாகிய உயர்தரப் பரீட்சைக் பெறுபேற்றில் தோட்டம் செய்து கொண்டு படித்த வவுனியா, செட்டிகுளம் மாணவன் ஒருவன் வடக்கில் முதலிடம் பெற்றுள்ளான்.

வவுனியா, செட்டிகுளம், நித்திக்குளம் என்ற பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்த இந்த மாணவன் தனது தாய், தந்தையுடன் இணைந்து தோட்;டம் செய்து அதில் வரும் சிறு வருமானத்தை வைத்தே படித்து வந்தான்.

ethiri.com

பாடசாலைக்கு சுமார் 3 கிலோமீற்றர் நடந்து சென்று அதன் பின் 6 கிலோமீற்றர் பேரூந்தில் பயணித்தே தனது பாடசாலையான செட்டிகுளம் பாடசாலைக்கு வெசன்று படித்து வந்தான். சில நாட்களில் பாடசாலையில் முதலாம் பாடம் முடிந்த பின்னரும் சென்றுள்ளான். இவ்வாறான வறுமைக்கு மத்தியில் சாதித்த மணிவேல் தர்மசீலன் என்ற இம் மாணவன் உயிர்முறைகள் தொழில் நுட்பப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று வடமாகாணம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் முதலாமிடத்தினையும், தேசிய ரீதியில் ஐந்தாம் இடம்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அந்த மாணவனை நாமும் பாராட்டுவதுடன், அந்த மாணவனின் தொடர் படிப்புக்கு உங்களால் முடிந்த உதவியையும் வழங்குங்கள்…

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post