ethiri.com

ஒருதலை காதலால் காதலியை தீமூட்டி எரித்த காதலன் – அரங்கேறும் காதல் பழிவாங்கல்கள் -photo
காதல்
விழுப்புரம் அருகேயுள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 30). தனியார் பஸ்சில் டிரைவராக வேலைபார்த்து வந்தார்.

அந்த பஸ்சில் வி.பாளையத்தைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவர் பள்ளிக்குச் சென்று வந்தார். அவரை செந்தில் ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வலது கை, கால் துண்டிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் செந்தில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

அதில் வி.பாளையத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்ததாகவும், இதனை அறிந்த அவரது உறவினர்கள் தனது வலது கை, கால்களை வெட்டி தண்டவாளத்தில் போட்டு விட்டதாக தெரிவித்திருந்தார்.

ethiri.com

இதுகுறித்து விழுப்புரம் போலீசார் விசாரணை நடத்தியதில் செந்தில் ரெயில் தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்றதில் அவரது கை, கால் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை இளம்பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் இளம்பெண்ணும் அவரது தங்கையும், தம்பியும் இருந்தனர். 3 பேரும் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இளம்பெண்ணின் வீட்டிற்குள் செந்தில் பெட்ரோல் கேனுடன் சென்றார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் செந்திலிடம் எதற்காக இங்கு வந்தாய் என்று சத்தம்போட்டார். இதில் ஆத்திரமடைந்த செந்தில், திடீரென இளம்பெண்ணின் தம்பி, தங்கை ஆகிய இருவரையும் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தள்ளி கதவை வெளிப்புறமாக பூட்டினார்.

பின்னர், இளம்பெண் வீட்டை விட்டு வெளியே ஓடிச்செல்லாமல் இருக்க முன்பக்க, பின்பக்க கதவை பூட்டினார். பின்னர், என்னை காதலிக்க மறுத்த நீ உயிரோடு இருக்கக்கூடாது என்று ஆவேசமாக பேசிய செந்தில் தான் வைத்திருந்த கேனை திறந்து, அதில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அதிர்ச்சியில் இருந்த இளம்பெண் சுதாரிப்பதற்குள் செந்தில் எரியும் நெருப்புடன் இளம்பெண்ணை கட்டிப்பிடித்தார். கத்தியாலும் குத்த முயன்றார். இதில் இளம்பெண்ணின் உடலிலும் தீ பற்றி எரிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டார்.

சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து ஓடி வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று இருவரையும் காப்பாற்றினர். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தீக்காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்கள் இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி செந்தில் இறந்தார். மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒருதலைக்காதலால் ஏற்பட்ட இந்த விபரீத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில, தற்கொலை செய்து கொண்ட செந்தில் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்விவரம் வருமாறு:-

செந்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வேலை இல்லாமல் ஊரை சுற்றி பொழுதை கழித்து வந்தான். அப்போது விழுப்புரம் அசோக் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. அந்த பெண் விழுப்புரம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் செந்திலை கைது செய்தனர். விழுப்புரம் கோர்ட்டில் செந்திலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து செந்தில் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. வெளியே வந்த செந்தில்குமார் தொடர்ந்து பெண்களை கிண்டல்-கேலி செய்து வந்தார். அதன்பின் பஸ் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார்.

அப்போது பஸ்சில் வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுபற்றி பஸ்சை லீசுக்கு எடுத்த உரிமையாளர்களிடம் பல பெண்கள் புகார் கொடுத்தனர். அவரும் செந்தில்குமாரை கண்டித்தார். ஆனால் அதை செந்தில்குமார் கேட்கவில்லை.

இந்தநிலையில் தான் அவர் இளம்பெண்ணை கடந்த 1 ஆண்டாக ஒருதலையாக காதலித்ததும், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். 

Related Post