ethiri.com

பெண்களால் இழுத்துச் செல்லப்பட்டு கூட்டமைப்பு தலைவர் சம்மந்தனுக்கு தீ வைப்பு: வவுனியாவில் பொங்கியெழுந்த பெண்கள்

வவுனியாவில் அடையாள உண்ணாவிரதம் ஒன்றினை மேற்கொண்ட காணாமல் போனவர்களின உறவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் அவர்களின் உருவப்படத்தினை எரியூட்டியுள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகம் அருகில் உள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு அருகில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய அவர்கள் போராட்டம் முடிவடையும் நிலையில் பிற்பகல் 4 மணியளவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் படத்தை தீயிட்டு எரித்துள்ளனர்.

ethiri.com

உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் சம்பந்தனின் புகைப்படத்தினை தாங்கி பேரணியாக சென்று இறுதியில் படத்தினை எரியூட்டினர். மேலும் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் உறவுகளை நினைத்து கதறி அழுததையும் காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் உரிய பதில் வழங்காவிடின் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post