ethiri.com

பாடசாலைக்கு குடிநீர் வசதிக்கான உதவித்திட்டம்…PHOTO…………….

பரிகாரிகண்டல் விளயாட்டுக்களகத்தால் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் நடாத்தப்பட்ட விளையாட்டு விழாவில் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட சந்தர்ப்பத்தில் குறித்த கிராமத்தின் முக்கியஸ்தர்கள், கிராம மட்ட அமைப்புக்கள் விளையாட்டுக்கழகம் மற்றும் மதகுருமார் ஆகியோர் அமைச்சருடன் தமது கிராமத்தின் ஒட்டுமொத்த தேவைகள் தொடர்பாக கலந்துரையாடிய வேளையில் பல தரப்பட்ட உதவிகளுக்கு அமைச்சர் தனது நிதி ஒதுக்கீட்டின் ஊடாக இந்த ஆண்டு தருவதாக வாக்களித்து அதன் அடிப்படையில் எல்லா விடயங்களும் நிறைவேற்றிய வேளையில், இறுதியாக மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட பரிகாரிகண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர்கள் குடிநீர் வசதியில்லாமல் சிரமப்படுவதாக கூறிய அந்தக் குறைபாட்டையும் நிவர்த்திசெய்யும் நோக்கில் குறித்த பாடசாலைக்கான குடிநீர் குழாய் கிணறு வசதியை செய்துகொடுக்க தீர்மானித்தார்.

அந்த வகையில் தனது 2016 ஆம் ஆண்டிற்கான பிராமண அடிப்படையிலான மூலதன நன்கொடை (CBG) நிதியில் இருந்து 100,000/- ரூபாய் நிதியினை ஒதுக்கி பாடசாலையில் குழாய்க்கிணறு, நீர்க்குழாய் இணைப்பு அதற்கான மோட்டார் மற்றும் நீர்தாங்கி என்பனவற்றை குடிநீர் திட்டத்தின்கீழ் அமைத்துக்கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில், குறித்த வேலைகளுக்கான காசோலையை 27-12-2016 செவ்வாய் மாலை 1:30 மணியளவில் பாடசாலையின் அதிபரிடம் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ப.ஜெரோம் எமிலியானுஸ்ப்பிள்ளை அவர்கள் உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.
நிருபர் – சோழன்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post