( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

சிந்திப்பாய் கொஞ்சம் …!…………….

நாலு பணமிருந்தால் நானும் முதலாளி
நாய் போல வாலாட்ட நகரும் சில கூலி
விசுவாசம் என்று முத்திரை குத்து
வீழ்ந்து நீ போனால் குத்துவான் முத்து ….

நேர்மைக்கு இங்கு போட்டானே தூக்கு
நேர்மையாய் தான் என சொல்வானே வாக்கு
நகர்கின்ற காலத்தில் நல்லதோர் நாடகம்
நாளைய காலத்தில் நகராத ஓடம் ..

உதயத்தின் ஒளிக்கு எவர் பணம் தந்தார் ..?
உதவாத மனிதர் உணரத்தான் மறந்தார்
விடிகின்ற பொழுதில் விடிவெள்ளி கிடையாது
விடிவெள்ளி பூக்கையில் விடிகாலை மலராது ….

அதிகார மேலாண்மை விடியலை கூட்டாது
அதை உணர்ந்தாலே வாழ்வு சலிக்காது …
ஒன்றழிந்து தானே ஒன்றின் உருவாக்கம்
உணர மறந்ததாலே உலகில் போர் துவக்கம் ….

செலவ்ந்தன் நீயென்று துள்ளி குதிக்காதே – நாளை
செல்லாத காசானால் என் செய்வாய் மறக்காதே
உள்ளத்தின் அழுக்கை முன்னே நீ விலக்கு
உண்மையாய் வாழ்ந்தால் நீ உலகின் முதல் விளக்கு…..!

– வன்னி மைந்தன் ( ஜெகன் )
27/12/2016 

Related Post