ethiri.com

ஆழிப்பேரலையின் 12ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நாளை உடுத்துறை நினைவாலயத்தில்………………

ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தின் 12ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நாளை (திங்கட் கிழமை) காலை 9.05க்கு வடமராட்சி உடுத்துறை சுணாமி நினைவாலயத்தில் நடைபெறவுள்ளது.

2004ம் ஆண்டு தழிழர் தாயகப்பகுதிகளில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் வடக்கு மாகாணங்களில் மாத்திரம் ஐயாயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் பலியானார்கள் அத்துடன் ஆயிரக்கனக்கான மக்கள் காயங்களுக்கு உள்ளானர்கள் பல ஆயிரம் மக்கள் தங்களுடைய சொத்துக்கள் உடமைகளை தொலைத்தார்கள்.

ethiri.com

நாளை (26.12.2016)ஆழிப்பேரலையின் 12ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் உடுத்துறை சுணாமி நினைவாலயத்தில் நடை பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது குறிப்பாக கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் கடற்தொழிலாளர் சங்கங்களை சார்ந்த அங்கத்தர்கள் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் எனப்பலர் ஒன்றினைந்த துப்பரவுப்பணிகளை மேற்கொண்டு நாளைய தினம் ஆழிப்பேரலை நிகழ்வுகளை அனுஸ்டிப்பதற்கு ஏற்பாடுகள் நிறைவு பெற்றுள்ளதுடன்.நாளைய தினம் இறைவணக்க வழிபாடுகளும் ஆத்தம சாந்தி பிராத்தனைகளும் இடம் பெறவுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியுடாக நினைவாலயத்திற்கான பிரதான நுழைவாயில் அலங்கார வளைவு அமைத்து நிர்வாகத்தினரிடம் சில தினங்களுக்கு முன்பு கையளிக்கப்பட்டுள்ளது. என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நிருபர் சோழன்

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post