சொத்துக்காக தம்பியை கிணற்றில் தள்ளிக் கொன்ற அண்ணன்…………..

உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் பவானிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கிட் (வயது 22). இவரது தம்பி ஆதித்யா (வயது 7) நேற்று வீட்டில் இருந்து வெளியில் சென்று வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அவரது பெற்றோர் தேட ஆரம்பித்தனர். அப்போது கிணற்றில் ஆதித்யா பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் பவானிப்பூர் வந்து சிறுவன் மரணம் தொடர்பாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவனின் அண்ணன் அங்கிட் மீது சந்தேகம் ஏற்பட அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அப்போது இரண்டு பேருடன் சேர்ந்து தம்பியை கிணற்றில் தள்ளி கொன்றதை அங்கிட் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து காவல் நிலைய அதிகாரி டி.கே.சிங் கூறுகையில், ‘குடும்ப சொத்து முழுவதையும் தானே கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அங்கிட் தன் தம்பி ஆதித்யாவை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்த 2 பேரை கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது’ என்றார். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post