ethiri.com

போட்டியிட வைகோ-கம்யூ. தலைவர்கள் பயப்படுவது ஏன்?: தமிழிசை கேள்வி

பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இஸ்லாமிய நாடுகளில் கூட இல்லாத தலாக் முறை பெண்களின் தனிஉரிமையை பாதிக்கிறது. எல்லோருக்குமான ஒரே சட்டம் இருப்பது தான் சரியானதாக இருக்கும்.

ethiri.com

பா.ஜனதா மதம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் சட்டங்களை ஏற்படுத்த முயல்கிறது எனக் கூறுவது தவறானது. சாதாரண விசயங்களுக்கு கூட பெண்ணுரிமை பேசுபவர்கள் இந்த விசயத்தில் வாய் மூடி மவுனமாக இருக்கிறார்கள்.

காவிரி விவகாரத்தை பொறுத்தவரை தி.மு.க. அழைப்பு விடுத்துள்ள சர்வ கட்சி கூட்டம் தீர்வை ஏற்படுத்தாது. முதலில் தி.மு.க. தனது கூட்டணி கட்சியான காங்கிரசுடன் கலந்து பேசி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி 2 ஆயிரம் கனஅடி நீரை வழங்க வேண்டும் என கர்நாடகா அரசை வலியுறுத்த வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக காலதாமதமாக நடத்தப்படும் அந்த கூட்டத்தால் எந்த தீர்வும் கிடைக்காது. அவசியமற்ற இந்த கூட்டத் தில் பா.ஜனதா கலந்து கொள்ளாது.

3 தொகுதி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடாதது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தமிழக மக்களின் ஆதரவு இருப்பதாக காட்டிக் கொள்ளும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கம்யூனிஸ்டு தலைவர்கள் ஏன் தேர்தல் களத்தில் இறங்க பயப்படுகிறார்கள்?

மக்களுக்காக பா.ஜனதா நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. எனவே நாங்கள் மாற்று சக்தியை உருவாக்குவோம்.

பணப்பட்டுவாடா செய்தது உறுதிபடுத்தப்பட்டதால் தான் 2 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு பழைய வேட்பாளர்களையே திராவிட கட்சிகள் மீண்டும் அறிவித்திருக்கிறார்கள். இது அந்த கட்சிகள் ஜனநாயகத்தையோ, தேர்தல் ஆணையத்தையோ மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது. எனவே பா.ஜனதாவுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். தேர்தல் ஆணையம் நேர்மையுடனும், நடுநிலையோடும் தேர்தலை நடத்த வேண்டும்.

பா.ஜனதா சார்பில் இந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 3 பேர் பட்டி யலை மத்திய தலைமைக்கு அனுப்பி உள்ளோம். மத்திய தலைமையின் ஒப்புதலுக்கு பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

முதல்-அமைச்சர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் தகுந்த நடவடிக்கை எடுத்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் நிர்வாகத்தை ஒப்படைத்து தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்தநிலையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பற்ற முறையில் பேசி வருவது ஆரோக்கியமான நடைமுறை இல்லை.

மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்திப்பு நாகரிக அரசியலின் வெளிப்பாடு. அதில் கருத்து சொல்லவோ, விமர்சனம் செய்யவோ எதுவும் இல்லை.

எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க ஆளும் கட்சிகள் தகுதியான இடத்தை தேர்வு செய்யவில்லை. இருந்தாலும் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமைக்கப்படும்.

இலங்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பின்புலத்தை ஆராய்ந்து, இதுபோன்ற செயல்களை ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post