ethiri.com

முதல்வர் பன்னீர்செல்வத்துடன் மலேசிய அமைச்சர் சந்திப்பு………

தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை மலேசிய நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரும், அந்நாட்டின் இந்தியன் காங்கிரஸ் தலைவருமான தத்தோ ஸ்ரீ எஸ்.சுப்ரமணியன் இன்று மாலை சந்தித்தார். தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்தார். அதிகாரிகள் பலரும் அப்போது உடன் இருந்தனர்.

ethiri.com

இந்த சந்திப்பின்போது, மலேசிய நாட்டிற்கான இந்திய தூதர் அஹமது பசாரசம் அப்துல் ஜலில் உடனிருந்தர்.

இதனையடுத்து, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து, மலேசிய நிதி அமைச்சர் நேரில் சென்று விசாரித்தார். 

Related Post