ethiri.com

தமிழின_போராளி தனித்தமிழ் இயக்க முன்னோடி புலவர் மகிபை பாவிசைக்கோ காலமானார்………….

: பிறந்த நாளான இன்று பெங்களூருவில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஐயாவிற்கு உலக தமிழர்கள் சார்பில் எமது வீர வணக்கங்கள். உலகமெங்கிலும் பரவி வாழும் தமிழ் மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய புலவர் மகிபை பாவிசைக்கோ (74 ) பெங்களூருவில்
(13-12-2016) காலமானார்.

இவர் சிவகங்கை மாவட்டம் ம‌கிபாலன்பட்டியை சேர்ந்தவர். கடந்த 1942-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி 12 வயதிலே தமிழில் பாட்டு இயற்றி திகழ்ந்ததாலும், தமிழின் மீதான காதலினாலும் தன‌து பெயரை மகிபை பாவிசைக்கோ என மாற்றிக் கொண்டார்.

ethiri.com

சிறுவயதிலே ஏராளமான‌ கவிதைகளை இயற்றிய புலவர் மகிபை பாவிசைக்கோ சிறுகதை,திரைக்கதை, நாவல், நாடகம், கட்டுரை, திறனாய்வு என பல்துறைகளிலும் சிறந்து விளங்கினார். கல்லூரி காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்மொழிக்கான‌ போராட்டங்களிலும், தமிழர் உரிமை போராட்டங்களிலும் பங்கேற்று பலமுறை சிறைக்கு சென்றார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரது ‘தென்மொழி’ஏட்டில் பத்திரிகையாளராக இணைந்தார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் குடியேறிய இவர் தமிழர்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். தமிழுக்காக‌வே வாழ்ந்து, தமிழருக்காகவே உழைத்து களம் பல கண்டார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக தோள்கொடுத்து நின்று, பெரும் பணிகளை ஆற்றினார். விடுதலை புலிகள் அமைப்புக்காக நாடகங்களை நடத்தி நிதி திரட்டி தலைவர்
பிரபாகரனிடம் கொடுத்தார்.

காலந்தோறும் தொடரும் கர்நாடகத் தமிழர்களின் அனைத்து இன்னல்களிலும் புலவரின் பாடல்கள் தெறிக்கும். எழுதுவதோடு நிற்காமல், போராட்ட களங்களிலும் முன்னால் நின்றார்.கடந்த மாதத்துக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, பெங்களூரு ஜெயதேவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி புலவர் மகிபை பாவிசைக்கோ காலமானார். இவரது பிரிவால் கர்நாடகாவில் உள்ள தமிழ் அமைப்பினரும், மக்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

புலவர் மகிபை பாவிசைக்கோவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நண்பர்கள் பலர் வந்து
பங்கேற்றனர் .புலவரின் உடல் பனிப்பேழையில் வைக்கப்பட்டு, அவருடைய பிறந்த நாளான 15.12.2016 இன்று அலசூரையடுத்த இலக்குமிப்புரக் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வீரத்தின் அடையாலமாக வீரத்தமிழீழாத் தாய்நாட்டின் வீரக்கொடியானது புலவர் பாவிசைக்கோ அவரின் பூத உடல்மீது போற்றப்பட்டது.

மேட்டூர் கேளத்தூர், புலியூர் புலிகள் பாசறையில் பயன்படுத்திய வீரக்கொடி.
அண்ணன் தளபதி ரொய் தமிழீழத்தில் காயப்பட்டு சிகிச்சைக்காக தமிழகத்தில் இருந்து வீரமரணம் அடைந்தபோது தளபதி ரொய் மீது தளபதி பொண்ணம்மான் கைகளால் போர்த்தப்பட்டு வீரவணக்கம் செய்யப்பட்ட வீரகொடி.
இப்பொழுது புரட்சி புலவர் மகிபை பாவிசைக்கோ அவர்கள் மீது போர்த்தப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழால்..தமிழருக்காக..காலம் முழுவதும் வாழ்ந்த புலவர் மகிபை பாவிசைக்கோவின் இறப்பு, கர்நாடகத் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. அவர் கண்ட கனவை, விட்டு சென்ற கடமையை நாம் தொடர்வோம்._
தமிழன் இரா.புவனேந்திரன்_ 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post