ethiri.com

மாற்றதிற்கான மலையக அமைப்பு மலையத்தில் தனது சேவையை ஆரபித்து உள்ளது………………..

மாற்றத்திற்கான மலைய அமைப்பு அன்மையில் மலையகத்தில் உறுவான ஒரு சமூக அமைப்பாதும் இந்த அமைப்பு தனது சேவைகளை புஸ்ஸல்லாவையில் ஆரபித்து உள்ளது அதன் ஒரு கட்டமாக இலவச அப்பியாசக் கொப்பிகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு புஸ்ஸல்லாவ ஸ்ரீ விவேகானந்தா அறநெறி பாடசாலையில் நடைபெற்றது.
மாற்றத்திற்கான மலையக அமைப்பானது. மலையக தமிழ் பெற்றோர்கள்¸ ஆசிரியர்கள்¸ மாணவர்களுக்கு கல்வி கல்வி கருத்தரங்குகள் நடாத்தவதன் ஊடாக கல்வி நிலையை அதிகரித்தல்¸ மலையக இலக்கிய¸ சமூக கலாச்சரா பாரம்பரிய கலைகளை மேப்படுத்த நடவடிக்கை எடுத்தல்¸ சுகாதாரம்¸ சுற்றாடல் சம்பந்தமான பயிற்சி கருத்தரங்குகள் நடாத்தி மேம்படுத்தல் பயிற்சிகள் வழங்கள்¸ இளம் வயதினரை தொழிலுக்கு அமர்த்துவதை தடுத்தல்¸ இளம் பிள்ளைகளை விட்டுவிட்டு வெளிநாட்டு வேலைக்கு செல்லும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல்¸ மலையக பெண்களுக்கான தலைமைத்துவம் வழங்துதல்¸ சுயதொழில் பயிற்சி வழங்கி சுயதொழில் வேலை திட்டம் மூலம் ஊக்குவித்தல்¸ மலையகத்தில் அனைத்து தரப்பு ஆசிரிய¸ ஆசிரியர்களுக்கு விழிப்பணர்வு பயிற்சி கருத்தரங்குகள் நடாத்தல்¸ மனித உரிமைகள் பாதுகாப்பு விழிப்புனர்வு ஏற்படுத்தல்¸ சகல இன கலைஞர்களோடு சந்திப்பை ஏற்படுத்துவதன் மூலம் புரிந்துணர்வு¸ ஐக்கியம்¸ சமத்துவம்¸ சமாதானம் ஏற்படுத்தல்¸ மாதாந்த சஞ்சிகை ஒன்றை வெளியிடுதல். போன்ற செயற்திட்டங்களை முன்னெடுக்க உள்ளது.
மேற்படி இலவச அப்பியாசக் கொப்பிகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வில் மாற்றத்திற்கான மலையக அமைப்பின் ஆலோசகர் சுப்பையா ராஜசேகரன்¸ இணைப்பாளர் லெட்சுமணன் சண்முகநாதன்¸ உப இணைப்பாளர்கள் தாரணி¸ விழுதுகள் தினேஷ்¸ செயலாளர் ஜெயமாறன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன ;போது ஸ்ரீ விவேகானந்தா அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாச கொப்பிகளும் முக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. இதில் மாணவர்கள் பெற்றோர்கள்¸ இந்து இளைஞர் மன்றத்தினர் மற்றும் சமூக நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர். மூக்கு கண்ணாடிகளை நாவலபிட்டியவை சேர்ந்த பார்திபராணி அவர்கள் நன்கொடையாக வழங்கி வைத்தார.

thumbnail_20161211_140918

ethiri.com

thumbnail_01 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post