ethiri.com

கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்ற ‘நினைவழியாப் பெருமனிதன்’ குருகுலம் அப்புஜியின் சிலைத் திறப்பு விழா photo

கிளிநொச்சி குருகுல நிறுவனர் அப்புஜி என அழைக்கப்படும் உயர்திரு வே.கதிரவேலு அவர்களின் நூறாவது பிறந்த தின நிகழ்வையொட்டி அப்புஜி அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா நிகழ்வும் ‘நினைவழியாப் பெருமனிதன்’ நூல் வெளியீட்டு விழாவும் இன்று வெள்ளிக்கிழமை (21-10-2016) கிளிநொச்சியில் நடைபெற்றது.

காலை 9.00 மணியளவில் கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள குருகுலவளாகத்தில் அமைக்கப்பட்ட அப்புஜி அவர்களின் உருவச்சிலையை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதிஸ்வரன் அவர்களால் நினைவுக்கல் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

ethiri.com

உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதைத்தொடர்ந்து அப்புஜியின் திருவுருவப்படத்தை தாங்கிய ஊர்வலம் கிளிநொச்சி இந்துக்கல்லூரி மண்டபத்தை சென்றடைந்து அங்கு நினைவழியா பெருமனிதன் எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, தவநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சி.சத்தியசீலன், கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன், ஓய்வு பெற்ற முன்னாள் அரச அதிபர் தி.இராசநாயகம், சிவபூமி தலைவர் ஆறு திருமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிருஓர் சோழன் 6

3

7 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post