ethiri.com

ஜெயலலிதா சமாதியில் சென்னை மாநகராட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம்……………………

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது மருத்துவத்துறைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். ‘அம்மா’ மருத்துவ காப்பீடு திட்டம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.

தற்போது ஜெயலலிதா இறந்துவிட்டாலும், அவருடைய மருத்துவ சேவை தொடர்வதை பிரதிபலிக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் நேற்று தொடங்கியது.

ethiri.com

மெரினா கடற்கரைக்கு அஞ்சலி செலுத்த வரும் அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அவருடைய சமாதி அமைந்துள்ள வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் செயல்பட தொடங்கியது. ஜெயலலிதா மறைவால் கடந்த 3 நாட்களாக தூக்கமின்றி சோர்வுடன் இருந்தவர்கள் இந்த மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றனர்.

முதியோர்கள் தங்களுடைய உடல்நிலையை டாக்டர்களிடம் பரிசோதனை செய்துவிட்டு, மருந்து-மாத்திரைகளை வாங்கி சென்றனர்.  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post