ethiri.com

யாழில் கடலுக்குச்சென்ற மீனவர் சடலமாக மீட்பு……………

நேற்றுமுன்தினம் யாழ் குருநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச்சென்ற மூவரில் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

யாழ் குருநகர் பகுதியைச்சேர்ந்த குறித்த மூன்று மீனவர்களும் நேற்றுமுன்தினம் குருநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை ஏற்பட்ட சீரற்றகாலநிலையில் அவர்களின் படகு நீரில் மூழ்கியுள்ளது

ethiri.com

இதில் ஒரு மீனவர் இறந்துள்ளதுடன் ஏனைய இருவரில் ஒருவர் கவிழ்ந்த படகின் உதவியுடன் கடலில் தத்தளித்துள்ளார்

இன்று காலை கடலிற்கு சென்ற மீனவர்கள் சிலர் குறித்த படகை கண்டுபிடித்து இறந்தவரின் சடலத்தை மீட்டுள்ளதுடன் உயிருடன் இருந்தவரையும் மீட்டு யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்

ஜெகன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் கிளின்டன் எனும் காணாமல்போன மீனவரை தேடும்பணி தற்போது இடம்பெறுகின்றது

இவ்விடயம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

நிருபர் புதிவன்

thumbnail_img_6559 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post