ethiri.com

டிரம்ப் நிர்வாகத்தில் மேலும் ஒரு இந்திய பெண்ணுக்கு பதவி

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தனது நிர்வாகத்தில் பதவி ஏற்க உள்ளவர்களை தேர்வு செய்து வருகிறார்.

அந்த வகையில், அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாண கவர்னராக உள்ள இந்திய பெண் நிக்கி ஹாலியை ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் பதவிக்கு அவர் தேர்வு செய்துள்ளார். இதன்மூலம் அங்கு கேபினட் அந்தஸ்து பெறும் முதல் இந்தியர் என்ற பெயரை நிக்கி ஹாலி பெறுகிறார்.

ethiri.com

இந்த நிலையில் மற்றொரு இந்திய பெண்ணான டாக்டர் சீமா வர்மாவை இன்னொரு முக்கிய பதவிக்கு டிரம்ப் தேர்வு செய்துள்ளார். சீமா வர்மா, மருத்துவ உதவி மற்றும் மருத்துவ சேவை மையங்களின் நிர்வாகியாக பதவி வகிப்பார். இவர் மருத்துவ உதவி மற்றும் மருத்துவ காப்பீடு துறையில் ஆலோசனை வழங்குவதில் பல்லாண்டு காலம் அனுபவம் மிக்கவர்.

கடந்த வாரம் நியூயார்க் நகரில் டிரம்பை சீமா வர்மா சந்தித்து பேசியது நினைவுகூரத்தக்கது.  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post