ethiri.com

சிம்பு வலையில் அந்த நடிகை – ஓரமாக ஓடும் உல்லாசம்

வாரிசு நடிகை ஒருவர் திமிரு நடிகரை கழட்டிவிட்டு வம்பு நடிகருடன் ஒட்டிக்கொண்டதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்..

வம்பு நடிகரைப் பற்றி கோலிவுட்டில் ஏதாவது ஒரு கிசுகிசு கசிந்துகொண்டுதான் இருக்கிறது. இவர் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் எனறு ஒரு பக்கம் கிசுகிசு கிளப்பிவிட்டாலும், உடன் நடிக்கும் நடிகைகளை வைத்தும் சிலர் கிசுகிசுக்களை கிளப்பி விடுவது வாடிக்கையாடி விட்டது.

ethiri.com

அதன்படிதான் தற்போது அவரைப் பற்றிய ஒரு கிசுகிசு தற்போது கோலிவுட்டில் தீயாக பரவி வருகிறது. அதாவது, இவருடைய படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வாரிசு நடிகையும் வம்பு நடிகரும் தற்போது நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

வாரிசு நடிகையோ ஏற்கெனவே திமிரு நடிகருடன் நெருக்கம் காட்டி வந்தார். சமீபத்தில் அவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் அவரை பிரிந்து வம்பு நடிகருடன் சேர்ந்து சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. வம்பு நடிகரும், வாரிசு நடிகையும் எந்த விழாக்களுக்கும் சேர்ந்தே போகிறார்களாம். தினமும் ஒருமுறையாவது நேரில் சந்தித்துக் கொள்கிறார்களாம்.

இவர்களுக்கு ஆதரவாக சில முன்னணி நடிகைகளும் களம் இறங்கியிருக்கிறார்களாம். இந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் இணையலாம் என்றும் பேச்சு அடிபடுகிறதாம். இதையெல்லாம் கேள்விப்பட்ட திமிரு நடிகர் தற்போது மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். ஏற்கெனவே, வம்பு நடிகர் மீது கோபத்தில் இருக்கும் திமிரு நடிகருக்கு இந்த செய்தி மேலும் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளதாம் 

Related Post