ethiri.com

தனியார் நிதி நிறுவனத்தில் 14 கிலோ தங்கம் கொள்ளை…………

குஜராத் மாநிலம் மைதாகாலி பகுதியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்குள் புகுந்த 2 மர்மநபர்கள், அங்கிருந்த காவலாளியை இரும்பு கம்பியால் தாக்கினர். பின்னர் வங்கி லாக்கரை உடைத்து அதில் இருந்த 14 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளை கொள்ளையடித்து சென்றனர்.

கொள்ளை போன தங்கத்தின் மதிப்பு ரூ.4 கோடி இருக்கும் என்று தெரிகிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

Related Post