எங்கே போனாய் எம் தலைவா ..?

அஞ்சுதலும் கெஞ்சுதலும்
அறியாவீரர்
அறவவலியும் மறவலியும்
நிறைந்த செம்மல்

நெஞ்சுரமும் நிமிர் நடையும்
படைத்த வல்லான்
நிறைமைதியும் போர்க்குணமும்
இணைந்த ஆற்றல்
துஞ்சுதலும் உடல்சோர்வும்
இல்லா போராளி

தொடுப்பகையும் சூழ்ச்சிகளும்
உடைத்த சூறை
நஞ்சரையும் வஞ்சரையும்
மிதித்த வேழம்
நடுவழியில் எமை நிறுத்தி
நடந்த தெங்கே ..?..????? 

Related Post