ethiri.com

லுங்கி அணிந்து வந்த பார்வையாளருக்கு கேரள சட்டசபைக்குள் அனுமதி மறுப்பு…………..

கேரளாவில் சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்றபோது கடந்த 8-ம் தேதி மலப்புரம் மாவட்டம் கொண்டட்டியைச் சேர்ந்த குஞ்சிமோயின் என்பவர் 38 பேர் கொண்ட குழுவுடன் சட்டசபை நிகழ்வுகளை பார்ப்பதற்காக வந்துள்ளார். அவர் வெள்ளை நிற கட்டம்போட்ட லுங்கி அணிந்திருந்தார். இதனால் அவரை பார்வையாளர் மாடத்திற்கு செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து அவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகார் மனுவில், ‘சட்டசபைக்கு வந்தபோது நுழைவு வாயிலிலோ அல்லது சட்டசபை கட்டிடத்தின் வாசலிலோ என்னை தடுக்கவில்லை. ஆனால் பார்வையாளர் மாடத்திற்குள் அனுமதிக்கவில்லை.

ethiri.com

மங்களகரமான தருணங்களில் வெள்ளை சட்டை மற்றும் கட்டம் போட்ட லுங்கி அணிவது மலபார் வழக்கம். எனவே, சட்டமன்றத்திற்குள் இந்த லுங்கி அணிந்து வருவதற்கு எதிராக விதிமுறை இருந்தால், அதனை திருத்த வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அவரது மனுவை பரிசீலித்த மனித உரிமை ஆணையம், இதுபற்றி சட்டசபை செயலாளர் பாபு பிரகாசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

அதேசமயம் முறையற்ற வகையில் ஆடை அணிந்திருந்தால் சட்டமன்றத்திற்குள் அனுமதி கிடையாது என்றும் இது வழக்கமான நடைமுறைதான் என்றும் சட்டசபை சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post