ethiri.com

கட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் அரசியல் கட்சி தொடங்குவதற்கு மற்றும் கட்சியின் உயர்பதவியை வகிக்க தடை கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று தனது பதில் மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், கூறப்பட்டுள்ளதாவது, அரசியல் கட்சிகளை பதிவு செய்ய மட்டுமே தங்களுக்கு அதிகாரம் உள்ளது. மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி, கட்சியின் பதிவை ரத்து செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், அந்த அதிகாரம் தேவைப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ethiri.com

மேலும், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகத்தை பின்பற்றுவது கட்டாய தேவையாக உள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post