ethiri.com

டைரக்டர்களுடன் மோதலா? - தமன்னா விளக்கம்

கதையில் தலையிட்டு காட்சிகளை மாற்றும்படி இயக்குனர்களை நிர்ப்பந்திப்பதாகவும், இதனால் டைரக்டர்களுக்கும், தமன்னாவுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதாகவும் தகவல் பரவி உள்ளது.

தமன்னாவுக்கு பாகுபலி படத்துக்கு பிறகு மார்க்கெட் உயர்ந்தது. தமிழ், தெலுங்கு, இந்தியில் 6 படங்கள் கைவசம் உள்ளன. சமீப காலமாக கதையில் தலையிட்டு காட்சிகளை மாற்றும்படி இயக்குனர்களை அவர் நிர்ப்பந்திப்பதாகவும் இதனால் டைரக்டர்களுக்கும், தமன்னாவுக்கும் படப்பிடிப்பு தளத்தில் அடிக்கடி மோதல் ஏற்படுவதாகவும் தகவல் பரவி உள்ளது.

ethiri.com

தமன்னா, தற்போது நடித்து வரும் ஒரு தெலுங்கு படத்தில் தனக்கு முக்கியத்துவம் இருக்கும்படி காட்சிகளை மாற்றச் சொல்லி இயக்குனருடன் தகராறு செய்ததாகவும் பட உலகில் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு தமன்னா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“நான் கதையில் தலையிடுவதாக வதந்தி பரவி இருக்கிறது. இதில் எந்த உண்மையும் இல்லை. கதையும், திரைக்கதையும் முழுக்க டைரக்டரின் சொந்த கற்பனை. அதில் தலையிட்டு மாற்றும்படி சொல்வது தவறு என்பது எனக்கு தெரியும். படப்பிடிப்பில் டைரக்டர் என்ன சொல்லி கொடுக்கிறாரோ அதன்படி நடித்து கொடுக்கிறேன்.

கதை சரியில்லை. எனது கதாபாத்திரம் சரி இல்லை என்று எப்போதுமே நான் கருத்து சொன்னது இல்லை. கதையில் எந்த உரிமையும் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். ஒவ்வொருவருக்கும் தனித்தனி திறமைகள் இருக்கிறது. ஒருவரிடத்தில் இருக்கும் திறமை இன்னொருவரிடம் இருக்காது. எனவே எல்லோருடைய திறமைகளையும் மதிக்க வேண்டும்.

யாருடனும் யாரையும் ஒப்பிட்டு பேசக்கூடாது. மற்றவர்கள் விஷயங்களிலும் தலையிடக் கூடாது. அவரவர் வேலையை அவரவர் செய்தாலே எல்லாம் சிறப்பாக நடக்கும். சினிமா என்பது கூட்டு முயற்சி. ஆனாலும் டைரக்டரை சார்ந்துதான் இருக்க வேண்டும். எல்லோரையும் வழி நடத்துவது இயக்குனர்கள்தான். அவருக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

இயக்குனர் வேலையில் யாரும் தலையிடக் கூடாது. ஆனாலும் சிலர் கதையில் தலையிட்டு இயக்குனர்களுக்கு அறிவுரை சொல்வது நடக்கத்தான் செய்கிறது. சீனியர் நடிகர்-நடிகைகள் கதைகளில் தலையிடுகிறார்கள். நான் அப்படி செய்வது இல்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

Related Post