ethiri.com

காதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி

விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜுங்கா’.

கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கின்றனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ethiri.com

சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியின் போது ‘ஜுங்கா’ படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஜுங்கா என்ற கதாபாத்திரத்தில் மாறுபட்ட தோற்றத்தில் டானாக நடிக்கிறார். சித்தார்த் விப்பின் இசையமைக்கும் இந்த படத்தை சமீபத்தில் திங்க் மியூசிக் கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில், இந்த படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று காதலர் தினத்தன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் பாரீசில் நடக்கிறது. கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Related Post