ethiri.com

இந்தியா ப்ரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக்கூடிய ப்ரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. #prithvi2

ஒடிசா கடல் பகுதியில் ப்ரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி
பலாசோர்:

ethiri.com

ஒடிசா மாநிலம் அருகே வங்க கடல் பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ப்ரித்வி-2 ஏவுகணை இன்று காலை 11.35 மணிக்கு சோதனை செய்யப்பட்டது.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ப்ரித்வி-2 ஏவுகணை 500 லிருந்து 1000 கிலோ கிராம் எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதிலுள்ள இரண்டு என்ஜின்கள் திரவ எரிபொருள் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில் ஏவுகணையில் மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்பு உள்ளது.

இந்த ஏவுகணை 350 கி.மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்லது. இந்த சோதனையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று வெற்றிகரமாக நடத்தி முடித்தது. முன்னதாக ப்ரித்வி-2 ஏவுகணை 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post