ethiri.com

அதில எனக்கு விருப்பமில்லை: இலியானா

தெலுங்கில் முன்னணி நடிகையான இலியானா, சமீபத்தில் கலந்துக் கொண்ட திரைப்பட விழாவில், தனிப்பட்ட வாழ்க்கையை தவிர்த்து மற்ற விசயங்களை உலகத்தினர் காணலாம் என கூறி உள்ளார்.

தமிழில் ‘கேடி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை இலியானா. விஜய் உடன் நண்பன் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையான இலியானா கடந்த டிசம்பரில் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதனுடன் எனது மகிழ்ச்சியான நேரம், கிறிஸ்மஸ், மகிழ்ச்சியான விடுமுறை, வீடு, காதல், குடும்பம் என தலைப்பிட்டு உள்ளார்.

ethiri.com

அதற்கு அடுத்து, புகைப்படத்தினை எடுத்தது கணவர் என்று பதிவிட்டு அதற்கருகே அவரது காதலரான ஆண்ட்ரூ நீபோன் பெயரை குறிப்பிட்டார். இதனால் இலியானாவிற்கு ஆண்ட்ரூவுடன் திருமணம் நடந்து விட்டது என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், சமீபத்தில் ரெய்ட் என்ற இந்தி திரைப்பட டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் இலியானாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேட்டபொழுது, உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? என நடிகர் அஜய் தேவ்கன் மறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நடிகை இலியானா, இதற்கு வெளிப்படையாக என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை. தொழிலில் நான் சிறப்புடன் செயல்படுகிறேன். தனிப்பட்ட முறையிலும் நன்றாக செயல்பட்டு வருகிறேன், நன்றி.

எனது தனிப்பட்ட வாழ்க்கையை பாதுகாக்க விரும்புகிறேன். அதுபற்றி அதிகம் பேச எனக்கு விருப்பமில்லை. அதனை தவிர்த்து மற்ற விசயங்களை உலகத்தினர் காணலாம் என்று நடிகை இலியானா கூறியுள்ளார். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post