ethiri.com

பிறந்தநாள் கொண்டாட்டம்: 40-க்கு மேற்பட்ட ரவுடிகளை கைது

சென்னையில் துப்பாக்கி முனையில் நேற்று நள்ளிரவில் 40-க்கு மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வீச்சரிவாள்கள், 30 கத்திகள், 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புறவழிச்சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம்: 40-க்கு மேற்பட்ட ரவுடிகளை கைது செய்தது போலீசார்
சென்னை:

ethiri.com

சென்னையில் துப்பாக்கி முனையில் நேற்று நள்ளிரவில் 40-க்கு மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வீச்சரிவாள்கள், 30 கத்திகள், 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை – மீஞ்சூர் புறவழிச்சாலையில் மாங்காடு அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரவுடிகள் ஒன்று கூடியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, மாங்காடு போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு சோதனை நடத்தினர். அப்பகுதியில் பதுங்கியிருந்த போலீசார், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 40-க்கு மேற்பட்ட ரவுடிகளை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் ரகசிய இடத்தில் வைத்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 கார்கள், 20-க்கு மேற்பட்ட டூ வீலர்கள், 30 கத்திகள், வீச்சரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அங்கிருந்து தப்பியோடிய ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post