ethiri.com

280 கோடி வங்கிக்கடன் மோசடி: பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக 280 கோடி ரூபாய் கடனாக பெற்றது தொடர்பாக பிரபல நகைக்கடை உரிமையாளர் நீரவ் மோடி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

ரூ.280 கோடி வங்கிக்கடன் மோசடி: பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு
புதுடெல்லி:

ethiri.com

பிரபல கோடீஸ்வரருக் வைர நகை வியாபாரியான நீரவ் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சி.பி.ஐ.யில், நீரவ் மோடி அவரது மனைவி மற்றும் உறவினர்கள், பங்குதாரர்கள் மீது புகாரளிக்கப்பட்டது.

முறையான தகவல்களை அளிக்காமல் 280 கோடி ரூபாய் முறைகேடாக பெற்றதாக புகாரில் கூறப்பட்டது. இதனையடுத்து, 31-ம் தேதி அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், அவர் மீது சி.பி.ஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.
 

Related Post