ethiri.com

அடுப்பில் மறைத்து கடத்தப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் தங்கம் சிக்கியது

அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து சென்னை தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வழியில் அந்த ரெயில் நெல்லூர் ரெயில் நிலையத்தில் நின்றபோது விஜயவாடாவில் உள்ள வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அந்த ரெயிலில் வந்த பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது,

ethiri.com

ஒரு பயணி கொண்டு வந்த ஸ்டவ் அடுப்பு வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் இருந்ததால் சந்தேகப்பட்ட அதிகாரிகள், அந்த அடுப்புகளின் மேல்பகுதியில் இருந்த தகடுகளை கழற்றி துல்லியமாக பரிசோதித்தனர். அங்கு பர்னரில் உள்ள குழாய் வடிவிலான இணைப்பின்மீது மெழுகு பூச்சு செய்யப்பட்டிருந்ததால் மேலும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், மெழுகை சுரண்டிப் பார்த்தபோது, அந்த குழாய் இணைப்புகள் முழுவதும் தங்கத்தால் ஆனவை என்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அந்த பயணியை கைது செய்ததுடன், ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 கிலோ 650 கிரான் தங்கம் கலந்து தயாரிக்கப்பட்ட இரு ஸ்டவ் அடுப்புகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் இதற்கு பயன்படுத்தப்பட்ட தங்கம் மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post