ethiri.com

உடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..?

பழச்சாறு உணவுத்திட்டம் உடலிலுள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்றுதல், சருமத்தை சுத்தப்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பிரபலமாகி வருகிறது.

உடல் எடை குறைய பழச்சாறு அருந்தலாமா?
பழச்சாறு உணவுத்திட்டமானது, உடலிலுள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்றுதல், சருமத்தை சுத்தப்படுத்துதல் போன்ற பல்வேறு உடல்நல காரணங்களுக்காக மிகவும் பிரபலமாகி வருகிறது. பழச்சாறு உணவுத்திட்டம் உடல் எடை குறைப்புக்கு எப்படி உதவுகிறது என்று பார்ப்போம்.

ethiri.com

பழச்சாற்றில் ஆன்டிஆக்ஸிடண்டுகளும் ஃபைட்டோநியூட்ரியன்ட்டுகளும் நிறைந்துள்ளன, இவற்றில் விதைகளும் சதைப் பகுதிகளும் தோலும் இருக்காது. இவற்றை உட்கொள்வது எளிது, பழங்கள் மற்றும் காய்கறிகளை அப்படியே சாப்பிடும்போது கிடைக்கும் நார்ச்சத்துகள் இவற்றை உட்கொள்ளும்போது கிடைக்காது.

உடல் எடை குறைப்புக்கு, பழச்சாறுகளை உள்ளடக்கும் பல்வேறு உணவுத் திட்டங்களில் ஒன்றை நீங்கள் பின்பற்றலாம். உதாரணமாக, வாரத்தில் ஒரு நாள் ஒரு வேளை உணவுக்குப் பதில் பழச்சாறு மட்டும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஒரு நாள் முழுதும் பழச்சாறுகள் மட்டுமே அருந்தலாம். பிரதான உணவுக்குப் பதில் பழச்சாறு எடுத்துக்கொள்ளலாம், அத்துடன் அடுத்த வேளைக்கு இடையே லேசான நொறுக்குத்தீனிகளை எடுத்துக்கொள்ளலாம் அல்லது காலை மட்டும் வழக்கம் போல் உணவு எடுத்துக்கொண்டு, அதன் பிறகு நாள் முழுதும் வெறும் பழச்சாறுகள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

பழச்சாறுகளில் கலோரிகளே இல்லை என்று கூற முடியாது, ஆனால் தினமும் நீங்கள் உட்கொள்ளும் பிற உணவுகளை விடக் குறைவான கலோரிகளே உள்ளது. சராசரியாக, ஒரு நாள் பழச்சாறு உணவுத் திட்டம் உங்களுக்கு 600-1000 கலோரிகளை வழங்கும், இது வழக்கமான உங்கள் உணவு அளிக்கும் கலோரிகளை விட மிகக் குறைவே.

பழச்சாறுகள் எளிதில் செரிமானமாகும், இதனால் செரிமானத்திற்கு செலவாகாத பெருமளவு ஆற்றல் சேமிக்கப்படும். மேலும், பழச்சாறுகளில் இருந்து இயற்கையாகவே உடலுக்கு அதிக தாதுக்களும் வைட்டமின்களும் கிடைப்பதால், உடற்பயிற்சி போன்ற பிற செயல்களில் ஈடுபடுவதற்கு உங்களுக்கு அதிக ஆற்றல் இருக்கும்.

எடை குறைப்புக்கு எளிய, மகிழ்ச்சியான வழி தெரிந்துவிட்டதல்லவா! இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த உணவு முறைக்கு என்று கடுமையான விதிகள் ஏதும் இல்லை. நீங்கள் விரும்பும் ஓர் உத்தியைப் பின்பற்றலாம். உங்கள் உணவில் போதுமான அளவு நார்ச்சத்தும் இருக்க வேண்டியது முக்கியம்.

ஆகவே சாப்பாட்டுக்கு பதில் பழச்சாறு அருந்தும் முறையைப் பின்பற்றி, அத்துடன் உடற்பயிற்சியையும் விடாமல் செய்துவருவது எடை குறைப்புக்கு மிகுந்த பலன் கொடுக்கும். இந்த உணவு முறையின் மூலம், உங்களுக்கு மிகவும் பிடித்த உணவையும் சாப்பிடலாம். ஆரோக்கியமல்லாத உணவுகளைத் தவிர்க்கவும் செய்யலாம்!
 

Related Post