ethiri.com

துபாயில் படமாகும் பிரபாஸ் படத்தின் அதிரடி சண்டை காட்சிகள்

பாகுபலி-2’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் ‘சாஹோ’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அதிரடி சண்டைக்காட்சிகள்
துபாயில் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

‘பாகுபலி-2’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. இதுவும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்துக்காக பிரபாஸ் தன் உடல் அமைப்பையே மாற்றி இருக்கிறார். ஸ்டைல் ஆன தோற்றத்தில் இதில் நடித்து வருகிறார்.

ethiri.com

இந்த படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. 3-வது கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் துபாயில் தொடங்குகிறது. இங்கு உயரமான கட்டிடங்களில் பிரபாஸ் – நீல் நிதின் முகேஷ் மோதும் அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்படுகிறது. இதற்காக பிரபாஸ் படக்குழுவினருடன் 60 நாட்கள் துபாயில் தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.
 

Related Post