ethiri.com

சினிமாவில் இருந்து விலக மாட்டேன்: பாவனா

சினிமாவில் இருந்து விலக மாட்டேன் என்றும், நல்ல வேடங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை பாவனா பேட்டி அளித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை பாவனா. தமிழில் சித்திரம் பேசுதடி, அசல், தீபாவளி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் கன்னட படத்தயாரிப்பாளரான நவீனுக்கும் காதல் மலர்ந்தது.

ethiri.com

5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் கடந்த மாதம் 22-ந்தேதி கொச்சியில் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சில நாட்கள் கணவர் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பாவனா, மீண்டும் சினிமாவுக்கு திரும்பி உள்ளார்.

இதுபற்றி அவர், மலையாள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

சினிமாவில் நல்ல வேடங்கள் கிடைக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன். சினிமாவை விட்டு விலகும் எண்ணம் எதுவும் இல்லை. எனது கணவர் நவீனும் இதைத்தான் விரும்புகிறார். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதை அவர் விரும்ப மாட்டார்.

எனது கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதில் என் கணவர், ஆர்வமாக இருக்கிறார். அது போல சினிமா உலகமும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வந்திருக்கிறது. எனவே மலையாள திரையுலகை விட்டு ஒரு போதும் வெளியேற மாட்டேன்.

எனக்கும், என் கணவருக்கும் இடையே எந்த வி‌ஷயத்திலும் ஒளிவு மறைவு இல்லை. எங்களின் அனைத்து வி‌ஷயங்களையும் நாங்கள் பகிர்ந்து கொள்வோம். என் கணவர் எப்போதும் என்னை ‘புச்சி’ என்றே அழைப்பார். கன்னடத்தில் இதற்கு ‘அன்பானவள்’ என்று பொருள்.

என் வாழ்க்கையில் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தபோது நவீனுக்கு தெரிவித்தேன். பெங்களூருவில் இருந்த அவர், சில மணி நேரத்தில் என் வீட்டிற்கு வந்து விட்டார். என்னோடு இருந்து எனக்கு தைரியம் தந்தார். அவரது ஆதரவு இருந்தது சினிமா உலகினருக்கு தெரியும்.

அந்த அளவுக்கு நாங்கள் ஒருவரையொருவர் புரிந்து வைத்துள்ளோம். எங்கள் இருவரின் வாழ்க்கையில் நடந்த அனைத்து வி‌ஷயங்களையும் பரிமாறி கொண்டோம். சினிமா, பயணங்கள், இளமை காலம், குழந்தை பருவம், படிப்பு, முதல் விருப்பம் உள்ளிட்ட அனைத்தையும் பேசி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Post