ethiri.com

உண்ணாண சொல்லுங்கோ,உங்களால மறக்கேலுமோ..?

உண்ணாண சொல்லுங்கோ
உங்களால மறக்கேலுமோ.—-

குஞ்சியாச்சியின் குசினியடியில
குலப்பாய் காய்க்கும் மாமரத்தை

ethiri.com

செல்லையாப்பா வீட்டில்
சிலித்து கிடக்கும் மாங்காயை

வீராப்பா வீட்டை காய்க்கும்
குண்டுபாண்டி மாங்காயை

வியளாச்சி ஆச்சியின்
விலாட்டு மாங்காயை

காசியப்பாவின் வீட்டில
களவெடுத்த மாங்காயை

அன்னப்பிள்ளை ஆச்சியின்ர
அம்பலவி மாங்காயை

நமசிவாயப்பா வீட்ட நிண்டு
நாங்க புடிங்கின புளிமாங்காயை

தாத்தா வீட்டு ஒழுங்கையில
தவண்டு புறக்கின மாங்காயை

பள்ளிக்கூடத்துக்கு பக்கத்தில
பறிச்சுத் திண்ட மாங்காயை

சிவக்கொழுந்து மாமியின்ர
சிலுத்து காச்ச மாங்காயை

மூத்திமாமா வீட்டை நிண்ட
முற்றத்து ஒட்டு மாவை

துரையம்மான் வேலியில்
துவைச்சு திண்ட மாங்காயை

சுந்தலிங்கப் பெரியம்மா வீட்டு
வாசலில் தொங்கும் மாங்காயை

கந்தையா பெரியையா வீட்டு
கறுத்த கொளும்பான் மாம்பழத்தை

மீனாட்சி பெத்தாத்தையின்ர
வெள்ளை கொழும்பானை

தெரிவோரத்தில நின்ற
துரவடி தும்பு மாங்காயை

பாமா பெத்தம்மா வீட்டு
பலவகை மாங்காயை

கிளியக்கா வேலியடி
கிளிச்சொண்டு மாங்காயை

குரங்கு உலுப்பிக்கொட்டும் பெரிய
குளத்தடி மாங்காயை

அணில் கொந்திய அழகான
கிளி கொந்திய மாம்பழத்தை
அடிபட்டு சாப்பிட்ட ஞாபகம்
உண்ணாண சொல்லுங்கோ
உங்களால மறக்கேலுமோ

கவிஞர் – ரேணுகா – லண்டன்
 

Related Post