ethiri.com

பிரபல ரவுடி, கூட்டாளி பொலிசாரால் சுட்டு கொலை

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நாபா சிறை உடைப்பில் தேடப்பட்ட பிரபல ரவுடி விக்கி கவுண்டர் மற்றும் அவனது கூட்டாளியை போலீசார் இன்று சுட்டுக் கொன்றனர்.

நாபா சிறை உடைப்பில் தேடப்பட்ட பிரபல ரவுடி, கூட்டாளியை போலீசார் இன்று சுட்டுக் கொன்றனர்

ethiri.com

சண்டிகர்:

பஞ்சாப் மாவட்டம் பாட்டியாலா மாவட்டத்தின் நாபா பகுதியில் உள்ள சிறையில், காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவன் ஹர்மிந்தர் மின்டூ மற்றும் அவன் கூட்டாளிகள் அடைக்கப்பட்டு இருந்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் தேதி போலீஸ் உடையில் துப்பாக்கிகளுடன் நாபா சிறைக்குள் புகுந்த ஹர்மிந்தரின் ஆதரவாளர்கள் சிலர், யாரும் எதிர்பாராத வகையில் சிறைக்காவலர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். பிரபல தீவிரவாதி ஹர்மிந்தர் உள்ளிட்ட ஐந்து பேரை மீட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த துணிகர சம்பவத்தால், பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

பாட்டியாலா மாவட்ட சிறைச்சாலை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். சிறைத்துறை டி.ஜி.பி., அதிரடியாக, ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டார். இந்த சிறை உடைப்புக்கு காரணமாக இருந்தவர்களைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக பஞ்சாப் மாநில அரசு அறிவித்திருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி விக்கி கவுண்டர் மற்றும் அவனது கூட்டாளிகளை பஞ்சாப் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், தேடப்படும் ரவுடியும் அவனது கூட்டாளிகள் சிலரும் அரியானா – பஞ்சாப் எல்லைப்பகுதியான கங்கா நகர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பதுங்கி இருப்பதாக நேற்றிரவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பஞ்சாப் மாநில போலீஸ் உளவுத்துறை பிரிவு உதவி ஐ.ஜி. குர்மீத் சவுகான் மற்றும் இன்ஸ்பெக்டர் பிக்ரம்ஜித் பிரார் உள்பட சுமார் 20 போலீசார் கொண்ட தனிப்படையினர் இன்று மாலை அந்த கிராமத்தை சுற்றி வளைத்தனர்.

போலீசாரை கண்டதும் அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த விக்கி கவுண்டரும் அவனது கூட்டாளிகளும் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் விக்கி கவுண்டர் என்னும் ஹர்ஜிந்தர் புல்லார்(27) மற்றும் அவனது கூட்டாளியான பிரேமா லஹோரியா ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு போலீசார் காயமடைந்தனர். குண்டு காயத்துடன் விக்கி கவுண்டரின் கூட்டாளிகளில் ஒருவனும் பிடிபட்டுள்ளான். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post