ethiri.com

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 62வது இடம்

உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இந்தியாவுக்கு 62-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 22-வது இடத்திலும், சீனா 26-வது இடத்திலும், வங்காள தேசம் 34-வது இடத்திலும், இலங்கை 40-வது இடத்திலும், பாகிஸ்தான் 47-வது இடத்தில் உள்ளன. இந்தப்பட்டியலில் லித்துவேனியா முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா இந்த பட்டியலில் 60-வது இடத்தில் இருந்தது.

ethiri.com

வளர்ந்த நாடுகளின் பட்டியலில் நார்வே முதல் இடத்தில் உள்ளது. அயர்லாந்து, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் அமெரிக்காவுக்கு 23-வது இடமும், ஜப்பானுக்கு 24-வது இடமும் கிடைத்துள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் லித்துவேனியாவை தொடர்ந்து ஹங்கேரி, அசெர்பைஜான், லடிவியா, போலாந்து ஆகிய நாடுகள் முறையே முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளன

Related Post