ethiri.com

கூட்டமைப்பை ஓட வைக்கும் விக்கினேஸ்வரன் – வேரோடு பிடுங்க குழி வெட்டும் சுமந்திரன் …

வடக்கின் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக புலிகள் அழிவின் பின்னர் தம்மை நிலை நிறுத்தி கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் கட்சிக்கு
சட்டம் தெரிந்த ஒருவர் தேவை பட்டார் .அதன் விளைவாக நீதிபதியாக செயல் பட்ட விக்கினேஸ்வரன் வடக்கின் முதல்வராக நியமிக்க பட்டு
பதவியில் அமர்த்த பட்டார் ,காலம் கழிய நிலைமை எதிர் மறையானது .

யாழில் குந்திய இந்திய தூதரகம் ,றோவின் நிழலாக விக்கியை பயன் படுத்த அவரும் அதற்கு ஏற்றவாறு தனது நகர்வுகளை சிங்கள மத்திக்கு எதிராக
திசை திருப்பி ஆடிய படியே நகர்ந்தார் .

ethiri.com

அமெரிக்கா ,இந்தியாவின் நேரடி கட்டு பாட்டில் உள்ள விக்கியன் நுண்ணறிவு ,சிங்களத்தை மட்டுமல்ல அதன் வால்பிடியாக
விளங்கி வரும் கூட்டமைபோரின் தலைமைக்கும் மிக நெருக்கடியை தோற்றுவித்தது .

இன படுகொலை ,எனவும் ,அந்த இன படுகொலையை நடத்தியவர்களை உலகம் தண்டிக்கக் வேண்டும் என அகிலம் முழுவதும்
சென்று அறை கூவல் விடுத்தார் .
விளைவு விக்கிக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் சிங்களத்தின் வாலாக செயல் படும் சுமந்திரன் தீவிரமாக ஈடுபட்டார் .

ஆனால் மக்களோ அதனை முறியடித்து விக்கினேஸ்வரன் தொடர்ந்தும் உறுதியாக செயல் பட வேண்டும் எனவும் அவருக்காக தாம்
அரணாக உள்ளதாக தமது பலத்த ஆதரவினை வழங்கி
வரும் நிலையில் கூட்டமைப்பு வீட்டை இழந்து வீதிக்கு வரும் இடியப்ப சிக்கலில் சிக்கி தவிக்கிறது .
இதுவே தற்போது களத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் நிஜங்களாக உள்ளன –

– வன்னி மைந்தன் – 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post