ethiri.com

உறவை தந்தால் உயிரை தருவேன்
உயிரே உயிரே நினைத்து விடு …..
அழைக்கும் மரணம் அதனை விரட்டி
அன்பே காப்பேன் புரிந்து விடு ….

எரியும் தீயில் உருகும் மெழுகாய்
எரிகிறேன் தினமும் புரிந்து விடு …
ஒற்றை சொல்லை உரைக்க மறுத்து
ஒளிகிறாய் ஏனோ மொழிந்து விடு ….?

கஞ்சல் உடையில் கசங்கிய உடலை
காண மறந்து சென்றாயா ..?
அழகிய உள்ளம் அதற்குள் உள்ளதை
அறிய மறந்து பறந்தாயா….?

ethiri.com

ஒளியை வீசும் கதிரவன் ஒளியில்
ஓசியில் வாழ்ந்து செல்பவரே ….
ஏழை என்றே ஏனோ என்னை
எறிந்து நீயும் சென்றாயோ …?

ஆடம்பரங்கள் தேடி அலையும்
அழகே கொஞ்சம் நிற்பாய்….
தேடிய இன்பம் தேறா பொழுதில்
தேம்பி தேம்பி எனக்காய் அழுவாய் …!

வலிகளை மட்டும் சுமையாய் தந்து
வையம் இன்று நகர்கிறதே …
வாங்கி நடந்த நட்பும் இன்று
வலையை மாற்றி பறக்கிறதே …
 

Related Post