ethiri.com

மட்டக்களப்பில் வேட்பாளர் வீட்டின் மீது குண்டு தாக்குதல் ..மயிரிழையில் உயிர்தப்பிய வேட்பாளரும் மகனும்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் சாமித்தம்பி சிவசுந்தரம் என்பவரது வீட்டின் மீது
சற்று முன்னர் இனம் தெரியாத நபர்களினால் பெற்றோல் குண்டுதாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளது ..வேட்பாளரும்
அவரது மகனும் வீட்டின் முற்ப்பகுதியில் இருந்து உரையாடிவிட்டு
வீட்டுக்குள் செல்லும் போது தீடீரென யாரோ அவர்கள் மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .
அவர்கள் வீட்டினுள் சென்றபடியால் தாக்குதலில் இருந்து அதிஸ்ர வசமாக தப்பியுள்ளனர் .
தாக்குதலை மேற்கொண்டவர்கள் அவரின் வீட்டின் முன்னால் தமிழ் தேசிய கூட்டமைப்பின்
சின்னத்தை வரைந்து விட்டு சென்றுள்ளனர் ..
இது தமிழ் கூட்டமைப்புக்கும் ,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கும் இடையில் முறுகலை
ஏற்படுத்துவதற்கு யாரோ செய்த சதி என ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர் ..எது என்னவாகினும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர் ..

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next
ethiri.com

Related Post